18/5/10

எல்லாம் வல்ல சித்தர் - சிவபெருமான்

முதன்மை சித்தராக அவதரித்தவர் எம்பிரானாகிய சிவபெருமான்.மதுரை மாநகரிலே எல்லாம் வல்ல சித்தராக தோண்டினர் சிவபெருமான்.ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் காட்சி தருவார் ,பின்பு திடீர் என மறைவார்.இதை கேள்விப்பட்ட பாண்டிய மன்னன் அவரை அரசவைக்கு அழைத்து வரும்படி காவலர்களை ஏவினான். சித்தர் வர மறுத்து விட்டார். மன்னரும் மீனாட்சியம்மை கோவிலுக்கு வரும்போது சித்தரை கண்டார். சித்தரை பரிசோதிக்கும் வண்ணம் அருகிலிருந்த கரும்பு வணிகனிடம் இருந்த கரும்பை சித்தரிடம் கொடுத்து அருகிலிருந்த கல் யானைக்கு புகட்ட முடியாம என்று கேட்க சித்தர் கல் யானையை அழைத்தார்.உயிர் பெற்ற யானை அந்த கரும்பினை வாங்கி உண்டது.
இதை கண்டு மன்னன் அதிசயித்தான்.சித்தரும் மாயமாகி விட்டார்.
அருள்மிகு சுந்தரேஸ்வரர் ஆலய பிரகாரத்தில் எல்லாம் வல்ல சித்தருக்கு தனி சன்னதி உள்ளது.மிகவும் விசேஷமான அற்புத சக்தி படைத்த சன்னடி இதுவாகும்.

3 கருத்துகள்: